வரமொன்று கேட்டேன் இறைவனிடம் மருஜென்மத்திலும் இவளே என் தாயாக வேண்டுமென்று... மறுத்தான் இறைவன் மொத்த அன்பையும் நீயே பெற்றுக்கொள்ள கூடாதென்று...
கவிதை எழுத முயன்று தோற்று போன எனக்கு குழந்தையின் மழலை பேச்சில் தெரிந்தது கவிதை .... ******************************* விடியலில் ஒரு நட்சத்திரம் குழந்தையின் சிரிப்பு... *******************************
கவிதைகளிடையே போட்டி எந்த கவிதையை முதலில் உன்னை பற்றி நான் எழுதுவது என்று...
நம் வீடு எனக்கு சொர்க்கமாகிவிட்டது நீ கால்பதித்த நாள் முதல் ... என் உடைகள் அதிகம் கறைபடிகின்றன நீ தொட்டு துவைக்கிறாய் என்பதால் ... நம் வீட்டுத் தோட்டத்தில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன நீ நித்தமும் சூடிகொள்கிறாய் என்பதால் ... இன்னும் எத்தனையோ மாற்றங்கள் என் மனதில் மட்டுமல்ல வீட்டிலும் ... என் மனைவியாக உன் வருகையால் ...
சுவாசிக்க மறந்தாலும் உன்னை நினைக்க மறந்ததில்லை நான் ... என் மறைவுக்கு பின் என்னை எரித்துவிட வேண்டாம் என்றிருக்கிறேன் உன் நினைவுகளும் என்னோடு கருகிவிடும் என்பதால் ...
பிரபஞ்சத்தில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை ஒரு அழகியின் முகவரி உன்னை காணும்வரை ... அழகி என்ற சொல்லே உன் பிறப்பிர்க்குபின் தான் வந்ததோ என்ற சந்தேகம் எழுந்தது என்னுள் உன்னை கண்டப்பின் ... *************************************** இதயம் இல்லாதவன் என்றார்கள் என்னை ... எப்படி இருக்கும் என்னிடம் நீ களவாண்டு சென்றப்பின் ... *************************************** உன்னை கண்டப்பின் நட்சத்திரங்களை காண்பதில்லை நான்... உன்னை ரசித்தப்பின் நிலவை ரசிப்பதில்லை நான்... அம்மாவசை இரவில் பௌர்ணமி வெளிச்சமாய் என் எதிரில் நீ... *************************************** காதல் போருக்கு கிளம்பிவிட்டேன் ஜெயித்துவிட அல்ல தோற்றுவிட உன்னிடம்... ****************************************
ஒரு வார்த்தையில் நான் எழுதிய கவிதை மனைவி ... இரு வார்த்தையில் நான் எழுதிய கவிதை என் மகள் ... எழுதாமல் படித்த கவிதை அம்மா ...