
பிரபஞ்சத்தில்
எங்கு தேடியும்
கிடைக்கவில்லை
ஒரு அழகியின் முகவரி
உன்னை காணும்வரை...
அழகி என்ற சொல்லே
உன் பிறப்பிர்க்குபின்
தான் வந்ததோ
என்ற சந்தேகம்
எழுந்தது என்னுள்
உன்னை கண்டப்பின்...
***************************************
இதயம் இல்லாதவன்
என்றார்கள் என்னை...
எப்படி இருக்கும்
என்னிடம் நீ
களவாண்டு சென்றப்பின்...
***************************************
உன்னை கண்டப்பின்
நட்சத்திரங்களை
காண்பதில்லை நான்...
உன்னை ரசித்தப்பின்
நிலவை ரசிப்பதில்லை
நான்...
அம்மாவசை இரவில்
பௌர்ணமி வெளிச்சமாய்
என் எதிரில் நீ...
***************************************
காதல் போருக்கு
கிளம்பிவிட்டேன்
ஜெயித்துவிட அல்ல
தோற்றுவிட
உன்னிடம்...
****************************************
wow..superb..
ReplyDeleteமிக்க நன்றி ஆனந்தி. என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியதற்க்கு மீண்டும் நன்றி.. என்னுடைய பிற வலைபதிவுகளையும் படித்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்...
ReplyDelete